திரை உலகில் ஆச்சரியங்கள் அவ்வப்போது நடக்கும். தற்போது அப்படி ஒரு ஆச்சரியம் நடக்கப்போவதாக சொல்கிறார்களா.
அது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை.ஆனால் அப்படி நடந்தால் வரவேற்கலாம் .
சில வருடங்களுக்கு முன்னர் கருப்பு ராஜா -வெள்ளை ராஜா என்கிற பெயரில் ஒரு படத்தைத் தயாரிக்கப்போவதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். இந்த படத்தில் விஷால் ,கார்த்தி இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க பிரபுதேவா இயக்குவதாக விளம்பரங்களும் வெளியாகின.
இந்த படத்தின் வசூல் நடிகர் சங்கக்கட்டிடத்துக்கு உதவும் என்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்தப் படம் அப்படியே கிடப்பில் மல்லாந்தது .
தயாரிப்பாளருக்கும் நடிகர்களுக்கும் கருத்து வேறுபாடு என்று சொன்னார்கள்.
தற்போது அந்த படம் மீண்டும் உயிர்த்தெழும் என சொல்கிறார்கள் .
இதில் குறிப்பிடத்தகுந்த சிறப்பு என்னவென்றால் நயன்தாரா நடிக்கலாம் என்பதுதான்.
காதல் முறிவுக்கு பின்னர் எஸ்.டி .ஆர் படத்தில் நயன் நடித்திருந்ததை சுட்டிக் காட்டுகிறவர்கள் பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பதில் என்ன தவறு கேட்கிறார்கள்.
இந்தப்படம் முதன் முதலாக தொடங்கப் பட்டபோது கார்த்தி -விஷால் இருவரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது கார்த்தி மட்டும் நடிப்பாராம் . விஷாலுக்குரிய கேரக்டரை பெண் கேரக்டராக மாற்றப்போகிறார்களாம்.அந்த கேரக்டரில்தான் நயன்தாராவை நடிக்கவைக்கப் போவதாக சொல்லுகிறார்கள்.
செய்தி உண்மையானால் மகிழ்ச்சியே.! இது உண்மையாக இருந்தால் நடிகர் சங்க மேட்டரில் சமரசம் ஏற்பலாம் என்கிறார்கள்.