சிம்ரன் சாயலில் ஒரு நடிகையை எஸ்.ஜெ.சூர்யா அறிமுகம் செய்தாரே ,அந்த பட்டு முகத்தை நினைவில் வைத்திருக்கிறீர்களா?ஜாம்பவான் ,மருதமலை ஆகிய படங்களில் நடித்திருப்பவர்.
அந்த நடிகையின் பெயர் நிலா.
உண்மையான பெயர் மீரா சோப்ரா.
இவர் தற்போது ஹைதராபாத் சைபர் பிரிவு போலீசில் புகார் செய்திருக்கிறார்.
என்ன மாதிரி புகார் என்று கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்.
“எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கற்பழிப்பு ,கொலை மிரட்டல் வருகிறது.பயமாக இருக்கிறது .காப்பாற்றுங்கள்.”
அடப்பாவிகளா, இப்படியெல்லாமா பயமுறுத்துவீர்கள்.
யார் இப்படி ரேப் மிரட்டல் விடுவது?
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை விரும்புவதாக நிலா புகழ்ந்து சொன்னது ஜுனியர் என்.டி .ஆர் ரசிகர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது.
ஆளாளுக்கு நிலாவையும் ,குடும்பத்தாரையும் ரேப் பண்ணப்போவதாக கிளம்பிவிட்டார்கள் ரசிகர்கள்.
ஹைதராபாத் போலீசார் செக்சன் 375 பிரிவின் படி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்
சூடான நிலா டிவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
“யாருக்காவது ரசிகையாக இருப்பது குற்றமாய்யா? தாரக்கின் (ஜூனியர் என் டி ஆர் ) ரசிகையாக இல்லாதவர்கள் ரேப் செய்யப்படலாம்..இதை சத்தமா சொல்ல விரும்புறேன்.ரேப் செய்யப்படலாம் .கூட்டு பாலியல் வன்முறை நடக்கலாம் ,பெற்றோர்கள் கொல்லப்படலாம் என்பதாக அவரது ரசிகர்கள் ட்வீட் செய்யப்படலாம் .இத்தைகைய ரசிகர்களால் தாராக்கின் பெயர்தான்கெடும் .
மிஸ்டர் தாரக் !விபசாரி .பெட்டை நாய் ,நிர்வாண நடிகை என்றெல்லாம் தூற்றப்படுவதற்கு காரணம் நான் மகேஷ் பாபுவின் ஆதரவாளராக இருப்பதுதான்.
இத்தகைய ரசிகர்கள்தான் உங்களை உயரத்துக்கு கொண்டு போகப் போகிறார்களா? என்னுடைய இந்த பதிவை புறக்கணிக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.”என மகேஷுபாபுவுக்கு டேக் செய்திருக்கிறார் .
இந்த மாதிரியான புகார்கள் என்றால் சின்மயி பொங்கி எழுந்து இருப்பாரே ,என்ன மேடம் பண்ணுகிறீர்கள்? உங்களின் கணவரது படத்தின் பிளாப் உங்களின் வாயை மூடி விட்டதா?