விஷாலும் ,மிஷ்கினும் வார்த்தைகளை கத்திகளாக மாற்றி மாறி மாறி வீசிக்கொண்டார்கள்.
இருவருக்குமே காயங்கள் !ஜென்மத்துக்கும் உறுத்துகிற வசை மொழிகள் .இருவருமே இசையாக மாற்றிக் கொண்டு மேடையில் கர்ஜித்தார்கள் .
எல்லாமே துப்பறிவாளன் 2 படத்தின் பிரதிபலிப்பு.
“விஷால். எப்பிறவியிலும் உன்னை நாடேன்.போ ஒழிந்து போ ” என்று சாபமிடாத குறையாக படத்தை விட்டு விளக்கினார் மிஷ்கின் .இதைப்போல விஷாலும்.!
“டைரக்சன் என்ன கம்ப சூத்திரமா நானே துப்பறிவாளன் 2 வை முடித்துக் கொள்கிறேன் “என்றார் விஷால்.
கொள்ளை நோய் கொரானா வந்து முடக்கிப் போட்டு விட்டது. இப்போதுதான் மெதுமெதுவாக சுவாசிக்கிறார்கள்.
இதில் சின்னத்திரை ஷூட்டிங்கை நடத்திக் கொள்ளலாம் என அரசு அனுமதித்தாலும் ஷூட்டிங் நடந்தபாடில்லை. சீரியல் நடிகைகள் நடிகர்கள் பெரும்பாலும் கன்னட தெலுங்கு ஆட்கள். அவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் வர வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. இங்கிருந்த நடிகர்களும் பயந்து கொண்டு வருவதற்கு தயங்குகிறார்களாம்.
இத்தைகைய நிலையில் மிஷ்கின் மூன்று படங்களை இயக்கவிருக்கிறார் .
அருண் விஜய்யுடன் ஒரு படம் கமிட் ஆகி இருக்கிறது.இது போலீஸ் கதை. இதற்கு ‘காவு ‘என்பதாக பெயர் வைத்திருக்கிறார்.
அடுத்து சிம்புவுடன் ஒரு படம். இந்தப்படத்தில் வடிவேலு நடிக்கிறார் என்கிறார்கள் .2021 -ல் தொடங்கும் என்று சொல்கிறார்கள். எல்லாமே ஹாரர் மூவிதான்.