முன்னணியில் இருப்பவர்களும் சரி அடிக்கடி விவாதிக்கப்படும் பொருளாக மாறியவர்களும் சரி ,மரணத்துக்குப் பின்னரும் சர்ச்சைக்குரியவர்களாகவே இருப்பார்கள்.
முன்னாள் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் தாஷ்கண்ட் மரணம் ,முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மரணம் ஆகியவைகளை உதாரணமாக சொல்லலாம்.
இந்தியத் திரை உலகில் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் துபாய் மரணம் விவாதிக்கப்படடதல்லவா? விதம் விதமாக காரணங்கள் சொல்லப்படவில்லையா! அவரது மரணம் இயல்பானதுதானா என்கிற சந்தேகம் இன்னமும் நீரூற்றாகத் தானே இருக்கிறது.
வேணுகோபால் ரெட்டி என்பவர் ஸ்ரீதேவிக்கு நெருங்கிய உறவினர். அவர் எழுப்பிய சந்தேகங்களை இன்றும் சிலர் விவாதிக்கிறார்கள்.!
“போனிகபூர் எடுத்த சில படங்கள் பெருத்த நட்டத்தை அடைந்தது .இதனால் ஸ்ரீ தேவியின் சொத்துகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுதான் ஸ்ரீ தேவியின் வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது.போனிகபூரின் முந்தைய கடன்கள் பெரும் சுமையாக இருந்தது”என்கிறார் வேணுகோபால் ரெட்டி.
“இதனால்தான் படங்களில் மறுபடியும் நடிக்க வரவேண்டியதாக இருந்தது. சகோதரி ஸ்ரீலதாவுடன் சொத்துப் பிரச்னை .சட்டப்போராட்டம் இப்படி பல சிக்கல்களை சந்தித்தார் .போனிகபூரை ஸ்ரீதேவி மணந்து கொள்வதை அம்மாவும் விரும்பவில்லை. போனியின் முதல் வழியாக சில சிக்கல்களை சந்தித்தார் ஸ்ரீதேவி .
இத்தைகைய பிரச்னைகள்தான் அவரது மனதை அரித்துக் கொண்டே இருந்தது”என்கிறார்.