உழைப்புக்கேற்ற ஊதியமா ,அல்லது வியாபாரத்துக்கு தகுந்த ஊதியமா ? தெரியவில்லை.! பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் திறமையான நடிகை. துணிச்சலான பெண்மணி. அங்கிருக்கிற ஆண் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதே ஒரு சாதனைதான்.! அத்தகைய பெண்ணைத்தான் தலைவி படத்தில் ஜெயலலிதாவின் கேரக்டருக்கு இயக்குநர் ஏ.எல்.விஜய் தேர்வு செய்திருக்கிறார்.
தலைவி படம் தமிழ் ,மற்றும் இந்தியில் தயாராகிறது.
பாலிவுட் பெரிய நடிகைகளது சம்பளம் கோடிக் கணக்கில்தான்.! தலைவி படத்துக்காக கங்கணா எவ்வளவு வாங்கி இருப்பார்.?
25 கோடி என்கிறார்கள் !
அந்த அளவுக்கு சம்பளம் வாங்கி இருப்பது உண்மைதானா?
இதோ அவரது பதில் .செமத்தியான பதில்.!
“தலைவி, இது ஒரு இருமொழி படம். இந்த படம் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் இரண்டிலும் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சுமார் 55 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. செயற்கைக்கோள் உரிமைகள், விநியோக உரிமைகள் என அந்த படத்திற்கு சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது.
எனவே ஒரு படத்திற்கு கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் நான் எனது கட்டணத்தை வசூலிக்கிறேன் . தலைவியில் இரண்டு மொழிகளில் படப்பிடிப்பில் நடிக்கிறேன். எனவே இரண்டு படங்களுக்கு கட்டணம் வசூலிப்பேன், ஒரு படத்திற்கான கட்டணம் வசூலிக்க மாட்டேன்” என்று அவர் கூறினார்.