நட்டி என்கிற நடராஜ் சுப்பிரமணியம் நடிகர் மட்டுமல்லர், நல்ல ஒளிப்பதிவாளரும் கூட.!
பாலிவுட்டில் சிறந்த பெயர்.
இன்று இவரது டிவிட்டர் பக்கத்தில் துண்டு துண்டாக பதிவுகள்.!
எல்லாமே பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பற்றியது…
அவரைப் பற்றி இவர் என்ன சொல்கிறார்.?
“நான் அடிமனசில இருந்து சொன்ன உண்மை…
யாருமே கேக்கல .கவனிக்கல..என்ன பண்றது?
அனுராக் காஷ்யப் ஒரு சுயநலவாதி. என்னை மறந்திட்டு பேசுறார் சின்னத் தனமா!
அனுராக் காஷ்யப் ஒரு முட்டாள். இன்னமும் முட்டாளாகவே இருக்கிறார்”
இப்படியெல்லாம் பதிவு செய்திருக்கிறார் .
என்னங்க இப்படி எதுக்காக அர்ச்சனை என்றால் “அவன் என்னோட நண்பன்.செல்லமா திட்டினேன்”என்கிறார்.
இதெல்லாம் நல்லதுக்கா,இப்படியொரு விளம்பரம் தேவையா நட்டிக்கு?