ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக தஞ்சை கே.சரவணன் தயாரிக்கும் தயாரித்திருக்கும் படம் ” மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று பெயர் வைத்துள்ளனர்.இந்த படத்தின் கதாநாயகனாக சுரேஷ்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷதா நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன்மனோகர், கொட்டாச்சி, பிளாக்பாண்டி, குள்ள சங்கர், டி.பி.கஜேந்திரன்,போண்டாமணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ, சுரேகா, கோவைபானு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவு – ஆர்.ஹெச்.அசோக்கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு – தஞ்சை.கே.சரவணன். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்… இது முழுக்க முழுக்க நகைச்சுவை படம். காமெடி என்றால் இரைட்டை அர்த்தமுள்ள வசனங்கள் கிடையாது, கிளாமர் கிடையாது அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும் இந்த “மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க”படத்தில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கிருந்த மாணவர்கள் காமெடி காட்சிகளை பார்த்து அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் கல்லூரியே கலகலப் பாகிவிட்டது. அதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த ஒரு வெற்றிதான்.படம் ஜனவரி இறுதியில் வெளியாக உள்ளது என்றார்