எஸ்.ஜெ.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் வழியாக கோடம்பாக்கத்தில் கால் வைத்தவர் மீரா சோப்ரா. அதன் பின்னர் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் அதிகமாக நடித்துவருகிறார்.
தமிழை விட தெலுங்கில் அதிக கவனம்.
இதனால்தானோ என்னவோ அங்கு வம்புகள் அதிகமாகியது.
அங்கு முன்னணியில் இருக்கிற ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் கொலை ,கற்பழிப்பு மிரட்டல் என மீரா புகார் அளித்தார்.அவர்களும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
“அப்படியே டெல்லியிலும் ஒரு புகாரை தட்டி விடுங்கள் .நீங்கள் அங்கிருப்பதால் வசதியாக இருக்கும்’ என்கிற ஆலோசனையும் வழங்கப்பட்டிருக்கிறது.
“நான் இந்த புகாரில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இந்த மாதிரியாக நடிகைகளை மிரட்டி ஆபாசமாக வசைபாடுகிற ரசிகர்களுக்கு யாராவது பாடம் புகட்ட வேண்டும் .இல்லாவிட்டால் திருந்த மாட்டார்கள் .இந்த மேட்டரை நான் சும்மா விடப்போவதில்லை” என்கிறார் மீரா.
தற்போது ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் 30 ஆயிரம் பேர் ஆன்லைனில் இவரை ‘டேக் ‘செய்து மிரட்டல் விட்டிருக்கிறார்கள்.பலர் கற்பழித்து விடுவதாக எழுதி இருக்கிறார்களாம்.
இந்த பிரச்னை பற்றி ஜூனியர் என்டிஆர் இதுவரை மூச்சு விடவில்லை.!