தூங்கினவன் கண் விழித்தால்தான் உயிர் இருக்கிறது என்பது பொருள்.
பலருக்கு தூக்கத்திலேயே உயிர் போய் விடுகிறது. .கேட்டால் மாசிவ் அட்டாக் சார் என்கிறார்கள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் பேசினான்.இப்ப என்னடான்னா செத்துட்டாங்கிறாங்க .என்ன சார் லைப் !”என்பதை சர்வ சாதாரணமாக கேட்க முடிகிறது.
இந்த கொரானா பலருக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்திவிட்டது.
அதில் ஒருவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ் .கவர்ச்சி நடிகை .
அவர் சொல்கிறார். “இந்த தொற்று நோய் எனக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது .அதாவது வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது என்பதை தெரிந்து கொண்டு விட்டேன்.நாம் வாழ்கிற ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். தாய் மண்ணை போற்ற வேண்டும்”என்பதாக சொல்லியிருக்கிறார்.