இன்றைய தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியின் பெயர் சொல்லக்கூடிய பேச்சாளர்களில் குஷ்பூ முக்கியமானவர் .அந்த கட்சியின் தேசிய அளவிலான செய்தித் தொடர்பாளர்.
தொடக்கத்தில் திமுகவில் இருந்தார். கலைஞரின் பாசத்திற்குரிய பேச்சாளர்கள் வரிசையில் இவரும் ஒருவர். காலப்போக்கில் கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விடை பெற்று தேசியக்கட்சியான காங்கிரசில் இணைந்தார்.
பாஜகவின் நெருங்கிய எதிரிகளில் இவரும் ஒருவர் .ஒரு தமிழரை மணந்து கொண்டு தமிழச்சியாக மாறியவரை இசுலாமியர் என சொல்லி மத வழியான எதிர்ப்பினை தமிழக பாஜகவினர் காட்டினார்கள்.ஆனால் அதை எல்லாம் குஷ்பூ பொருட்படுத்தவில்லை.
பின்னர் உருவத்தை சொல்லி கிண்டல் செய்தனர்.
ஆனால் அவர்களுக்கு பேரதிர்ச்சியாக குஷ்பூவிடம் ஆச்சரியப்படுத்தும் வகையில் மாற்றம்.
எடை குறைந்து மிகவும் ஸ்லிம் ஆகிவிட்டார்.
“எப்படி இது சாத்தியமாயிற்று?”
“நல்ல உடற்பயிற்சி.உணவுக்கட்டுப்பாடு. நல்ல மாற்றம் ஏற்பட்டது “என்கிறார்.