மீன் வித்த காசு நாறவா போகுது என்பார்கள் விளையாட்டாக!
சினிமா உலகமே துந்தனா பாடுகிற நிலையில் சிலர் வேறு தொழிலுக்கு ஷிப்ட் ஆகி வருகிறார்கள். பலர் அய்யோ இமேஜ் காலியாகிவிடும் என்கிற பயமுடன் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் தங்களுக்கான தொழிற்சங்க அமைப்புகள் வழியாக உதவிகள் பெறுகிறார்கள்.ஆனால் கேரளாவில் பிரபல காமடி நடிகரான ரமேஷ் பிஷாரடி ,என்பவர் மீன் கடையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
இவர் டிவியிலும் பிரபலம் .மேடையிலும் பிரபலம். இயக்குநரும் ஆவார். தனது தொழில் நண்பரான தர்மஜான் என்பவர் நடத்துகிற மீன் கடையில் சேர்ந்து வேலை செய்து வருகிறார்.