ராதிகா ஆப்தே வேலூரில் பிறந்த பெண். தந்தை சிறந்த நரம்பியல் டாக்டர் ,இங்கிருந்து புனேவுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்.வாய்ப்புத் தேடி மும்பைக்கு சென்றபோது வேண்டத்தகாத அனுபவங்கள் காரணமாக மும்பைக்கே வருவதில்லை என முடிவு செய்து புனேவுக்கு திரும்பி விட்டார்கள்.
தன்னுடைய நீண்ட நாள் நண்பரான இசைக்கலைஞர் பெனடிக்ட் டாய்லரை மணந்து கொண்ட பிறகுதான் அவரது வற்புறுத்தல்காரணமாக மும்பைக்குள் மீண்டும் நுழைந்தார்.
தமிழில் ‘தோனி ‘சித்திரம் பேசுதடி ‘கபாலி ‘ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
வெளிப்படையாக பேசுகிறவர். “தனக்கு பலர் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக”பகிரங்கமாக சொன்னவர்.
எட்டு ஆண்டுகள் சினிமாவில் உழைப்பு.
“ஓய்வு இல்லாமல் உழைத்து விட்டேன். இந்த லாக்டவுன் காலத்தில் கிடைத்திருக்கிற ஓய்வினை அனுபவிக்க முடிந்தது. நிறைய கதைகள் எழுதியிருக்கிறேன்.எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. ஓய்வு நேரத்தில் சில நல்ல திட்டங்களை பற்றி சிந்திக்க முடிந்தது.படஉலகத்திலிருந்து விடைபெற்று ரெஸ்டாரன்ட் தொழிலில் ஈடுபடுவதை பற்றியும் சிந்தித்தேன் “என்கிறார் ராதிகா ஆப்தே .