சென்னையில் திமுகழகத்தை வளர்த்தவர்களில் தியாகராயநகர் ஜெயராமனும் ஒருவர். இவரை பழக்கடை ஜெயராமன் என்று சொல்வார்கள். கலைஞரின் செல்லப்பிள்ளைகளில் இவரும் ஒருவர்.
இவரது மகன்தான் ஜெ.அன்பழகன்.
திமுகவின் சார்பில் மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவருக்கு உண்டு..
கொரானாவுக்கு பலியான பிரபலங்களில் இவரும் ஒருவர். வாசனையான முகப்பவுடர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய பதவியில் இருந்தவரும் கொரானாவுக்குத்தான் பலியானார்.தற்போது பலமிகுந்த எதிர்க்கட்சியின் முக்கியமான ஒருவரையும் கொரானா கொள்ளை அடித்து விட்டது.
இன்னும் என்னென்ன நடக்கப்போகிறது..கொரானாவுக்குத்தான் தெரியும்.
ஜெ.அன்பழகனின் மறைவுக்கு அனைத்துக் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அது மரபு.
சொந்தக்கட்சியை சேர்ந்த தலைவர் இரங்கல் தெரிவிப்பது பேரிழப்பின் தாக்கம்.இவருக்கு இணையான ஒருவரை எங்கே போய் தேடுவோம் என்கிற பரிதவிப்பு.
திமுகழகத்தின் தலைவர் முக ஸ்டாலின் என்ன சொல்கிறார்?
“இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது! மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் ஜெ.அன்பழகனை எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்?நாட்டுக்காக போராடி உயிரிழந்த இராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது, #CoronaVirus தடுப்பு பணிக்காக போராடி உயிரிழந்த என் சகோதரர் ஜெ.அன்பழகனின் தியாக வாழ்வைப் போற்றுவோம்! திராவிட இயக்கம் மறவாது #JAnbazhagan-ன் திருமுகத்தை!”என துயரத்தை இறக்கி வைத்திருக்கிறார்.
திமுகவின் தீவிர ஆதரவாளரான கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
“ஜெ.அன்பழகன் மறைவில் தன் வலக்கரம் இழந்தார் தலைவர் ஸ்டாலின். செயல் சிங்கத்தை இழந்தது இயக்கம். உறுதிப்பொருள் உரைக்கும் உறுப்பினரை இழந்தது சட்டமன்றம்.
என் நண்பரை இழந்தேன் நான்.
மரணம் கொடிது; கொரோனா மரணம் கொடிதினும் கொடிது. ஆழ்ந்த இரங்கல் இயக்கத்தார்க்கும்; இல்லத்தார்க்கும்.”