கல்லடி விழும் .சொல்லடி படும் .சமயங்களில் பூங்கொத்துக் கொடுத்து புகழவும் செய்வார்கள். இது சினிமாவில் சகஜம் . டி .வி.சீரியல்கள் ,வெப் சீரியல்களுக்கு இது மிகவும் பொருந்தும்.
காலை நீட்டி வெத்திலையை மென்றபடி வீட்டில் டிவி பார்க்கிற மூதாட்டிகள் வண்டை வண்டையாக திட்டுவார்கள். “போறத பாரு மாரை நிமித்திக்கிட்டு…த்து.!இப்படியா ஒருத்தி இருப்பா.கள்ளப்புருஷன் கேக்குதாக்கும் கக்கூஸ் வெளக்கமாத்துக்கு!”என சர்வ சாதாரணமாக சொல்லுவார்கள்.
அவர்களின் மனதுக்குப் பிடித்தமான காட்சிகள் வந்தால் பாராட்டவும் செய்வார்கள்.
சினிமாவில் வேறு மாதிரி ! சீட்டை கிழித்து விடுவார்கள்.
வெப் சீரியல்களை பொருத்தவரை ரசனை வேறு மாதிரி.! வெளியில் வெறுப்பும் ,உள்ளத்தில் ரசிப்பும் இருக்கும்.அவர்கள் எதிர்பார்த்தமாதிரி சீன்கள் வரவேண்டும்.! கெட்ட வார்த்தை ,ஆபாசக் காட்சி என நிறைந்திருக்க வேண்டும்.
டிரிபிள் எக்ஸ் என ஒரு வெப் சீரியல்.
ராணுவ வீரர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி கள்ளக்காதலனுடன் கொஞ்சிக் குலாவுகிறாள்.
இன்னொரு காட்சியில் தன்னுடைய கணவரின் ராணுவ சீருடையை அணிந்து கொண்டு சரசமாட கள்ளக்காதலனை பணிக்கிறாள். அந்த சீருடையில் ராணுவத்தின் சின்னங்கள் இருக்கின்றன.
இது போதாதா? சமூக வலைத்தளங்களில் ஷோபா கபூர் ,ஏக்தா கபூர் இருவரையும் கந்தலாக்கி விட்டார்கள்.
ஏக்தா கபூர் என்ன சொல்கிறார்?
“மன்னிப்புக் கேட்க தயாரா இருக்கேன்.ராணுவ அதிகாரிகள் ,ராணுவத்தினரின் மனைவிகள் இவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.ஆனால் 71 வயதான என்னுடைய அம்மா ஷோபா கபூரை சந்திக்கு இழுத்திருக்கணுமா? எங்க ரெண்டு பேரையும் ரேப் பண்ணப்போவதாக மிரட்டுவதெல்லாம் நியாயமா?
டிரிபிள் எக்ஸ் சீரியல் செக்ஸ் மேட்டர்தான்.சிலரால் விரும்பப்படுகிறது.சிலரால் வெறுக்கப்படுகிறது. நான் அவர்கள் குறிப்பிடுகிற காட்சிகளை பார்த்திருந்தால் நீக்கி இருப்பேன்.”என்கிறார்.
என்ன ஆகப்போகுதோ?