ஐஸ்வர்யா லட்சுமி.
ஐஸ்வர்யா பெயர் வரிசையில் தமிழ்ச்சினிமாவில் ஐக்கியமாகி இருக்கிற மலையாள தேசத்து தன லட்சுமி.
விஷாலின் ஆக்ஷன் படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் . தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கி வெளியீட்டுக்கு காத்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகிகளில் ஐவரும் ஒருவர். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டபடைப்பாக உருவாகி வரும் பொன்னியின் செல்வனில் படகோட்டி பெண் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஜகமே தந்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களின் வெளியீட்டுக்கு பின் தமிழில் இவர் அலை தான் வீசும் என பலரும் கூறிவருகிறார்.
, சின்ன வயசுல இருந்தே தனக்கு,சிறந்த பரதநாட்டியக்கலைஞரும், நடிகையுமான சோபனா மீது ஓவர் க்ரஷ் என்று கூறியுள்ள ஐஸ்வர்யலட்சுமி,தனது இன்ஸ்டாகிராமில் “இதயம் மற்றும் ஆத்மார்த்தமான க்ரஷ்” என சோபனாவின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இப்பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.