ஓஷோவின் பக்தையாகி விட்டார் அமலாபால்.
தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தத்துவ கருத்துக்களையும்,தனது விதவிதமான புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் அமலாபால் தனது சகோதரர்களுடன் இணைந்து வேஷ்டி சட்டை அணிந்து கலக்கலாக போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ரசித்து வருவதோடு, ‘வேஷ்டி சட்டை உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது.ஆனால்,சகோதரர்களாக இருந்தாலும் இந்த கொரோனா நேரத்தில் தனிமனித இடைவெளி இல்லாமல் இருப்பது தவறு என்றும் சிலர் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர்.
அமலாபால் ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்திலும், ‘கேடவர்’ என்ற தமிழ்ப்படத்திலும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ வெளியீட்டுக்கு காத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.