ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இறுதியாக ஆயுள் தண்டனை பெற்றவர்களில் பேரறிவாளனும் ஒருவர்.
இவரின் விடுதலை தமிழக அரசின் கைகளில் இருக்கிறது.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதைப்போல பேரறிவாளனின் எஞ்சிய வாழ்வு ஆளும் அரசியல்வாதிகளின் முடிவில் இருக்கிறது.
இந்த நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
இதோ அவரது டிவிட்டர் பதிவு.
“78 வயது கணவரும் 72 வயதில் நானும் எங்கள் வாழ்வின் இறுதியில் இருக்கிறோம் என்பதை நன்கறிவேன் எனக்கு பின்னே என் மகனின் கதி பற்றி துயருற்று அழுத இரவுகள் பலவுண்டு நாங்கள் இருக்கிறோம் என்று இணையமே எழுந்து நிற்கும் #StandWithArputhamAmmal கண்டு நம்பிக்கையில் அழுகின்றேன். மகன் வருவான்!”என்பதாக பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்து அவரது டிவிட்டரில் செய்திருக்கிற பதிவு.