திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் சொல்வதை கேட்டபோது பேராச்சரியம் ,பிரமிப்பு.
சென்னை புதுப்பேட்டையில் இவ்வளவு பெரிய வீட்டின் மாதவாடகை 15 ரூபா.
தற்போது சிதிலமடைந்து கிடக்கிற அந்த வீட்டின் முன்பாக நின்று கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கி விட்டார் போலும். ஆமா அந்த வீட்டின் ஓனர் யாரு?இப்படி போட்டிருக்காரே !
கம்பனையும் பாரதத்தையும் மனதில் சுமந்து கொண்டிருப்பவர் அவரது பொற்காலத்தை சுருக்கமாக சொல்லியிருக்கிறார் வள்ளுவரைப் போல.!
“1958 -1965 மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு…7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங்களும்…ஓவியக்கல்லூரி
6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்….
இந்தியாவில் டெல்லி முதல் கன்யாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500/- ..குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள்
பொன்னான நாட்கள் “