பிரபல தமிழ் தெலுங்கு நடிகை ரம்யா கிருஷ்ணன். மூத்த நடிகை,பெயர் சொல்லக்கூடிய படங்களில் ,கேரக்டர்களில் நடித்தவர்.ஜெயலலிதாவாகவும் நடித்திருக்கிறார்.
பாகுபலி ராஜமாதா சிவகாமியை மறக்க முடியுமா?
“இதுவே எனது கட்டளை “என்கிற அந்த கம்பீரக்குரல் ,’படையப்பா”என்கிற கர்ஜனை இன்னும் செவிகளுக்குள்ளேயே இருக்கிறதே.!
ஆந்திர திரைப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சிதான் ரம்யா கிருஷ்ணனின் கணவர்.
எதற்கு இவ்வளவு அறிமுகம்.ரம்யா கிருஷ்ணன் என்றால் எங்களுக்குத் தெரியாதா என்று கேட்க நினைப்பவர்கள் பின்வருகிற செய்தியை படிக்கிறபோது அதிர்ந்து விடுவீர்கள்.!
இவரது இன்னோவா ஆடம்பரக் காரில் மது பாட்டில்கள் கடத்தப்பட்டுள்ளன .
சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை.ஆனால் மாநகரின் எல்லையோர அண்டை மாவட்டங்களில் மதுக்கடைகள் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.இதனால் யாரும் கடத்தி வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் கடுமையான சோதனை நடத்தி வருகிறார்கள்.
கிழக்குக்கடற்கரை சாலையில் கானாத்தூர் போலீசார் கார்களை மடக்கி சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது சிக்கியிருக்கிறது ரம்யாவின் ஆடம்பரக்கார்.காருக்குள் ரம்யாவும் சகோதரி வினயாவும் இருந்திருக்கிறார்கள்
96 பீர் பாட்டில் ,8மது பாட்டில்கள் .கைப்பற்றி டிரைவர் செல்வகுமார் என்பவரையும் கைது செய்துள்ளனர். டிரைவரை தனது சொந்த ஜாமினில் ரம்யா கிருஷ்ணன் அழைத்து சென்று விட்டார்.
இந்த மது பாட்டில்கள் எங்கிருந்து ,யாருக்காக கடத்தப்பட்டுள்ளன என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.