தலைவன் இருக்கின்றான் –கமல்ஹாசனின் படம்
இணையாக விஜய் சேதுபதி நடிக்கிறார். வடிவேலுவும் படத்தில் இருப்பார் என்கிறார்கள்.
இசை அமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.
கமல்ஹாசனும் ரகுமானும் சமூக வலை தளபக்கத்தில் நேற்று உரையாடினார்கள்.
அப்போது இருவரும் பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
கமல் சொன்னார்:
” நீங்கள் இதுவரை கேட்டிராத வகையில் ரகுமானின் பாடல் ஒன்று தலைவன் இருக்கிறான் படத்தில் மிக பிரமாதமாக வந்திருக்கிறது . ரகுமானின் பாடல்களிலேயே சிறந்த பாடல் என்று இதனை கூறலாம்,
இந்த பாடல் வேறு படத்தில் வந்திருந்தால் நான் வயிறு எரிந்திருப்பேன். நான் எழுதிய அந்த பாடல் ஒரே நாளில் பதிவாகிவிட்டது. இது போன்ற ஒரு பாடலை நான் கேட்டதில்லை,
இயக்குநராக ரகுமானிடம் பணிபுரிவது சுலபமானது. இசையமைப்பாளர் ரகுமான் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக கொடுக்கக் கூடியவர் . ஒரு பாடலில் இடம்பெற்ற இசை மீண்டும் ரிப்பீட் ஆகாது
.நான் முதலில் ரஹ்மானின் இசைத் திறமை குறித்து அறியாமல் இருந்தேன் .
இந்தியன் படத்தில் இடம்பெற்ற கப்பலேறி போயாச்சு என்ற பாடலை முதலில் கேட்கும் போது எனக்கு பிடிக்கவில்லை என்று இயக்குனரிடமும் சொன்னேன்.
ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது அந்தப் பாடல் நான் நினைத்ததை விட மாறுபட்டு இருந்தது “என்று கூறினார்,
தொடர்ந்து, தமிழன் யார் என்கிற கேள்விக்கு பதில் கூறிய கமல், “தமிழ் பேச தெரிய வேண்டும். நம் மொழியில் பேசியவுடன் சந்தோசம் ஏற்படணும்.
குட்மார்னிங் என ஒருவர் சொல்வதை விட, வணக்கம் என ஒருவர் கூறினால் அதில் சந்தோசம் வரும்.
. தமிழன் அது ஒரு அடையாளம். தாய் தந்த மொழி. ரகுமானுக்கு தமிழுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது”
எனக்கு தமிழ் சினிமாவில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அதிருப்தியாக இருந்தது. அதன் பிறகு மலையாளத்திற்கு ஓடிப் போய்விட்டேன்.
கேரளத்தில் தான் என்னால் நிஜமான சினிமாவை கற்றுக்கொள்ள முடிந்தது. அதை விட்டால் பாலச்சந்தர் தான். அதன் பிறகு பாராதிராஜா என்பவரை படம் எடுக்க விட்டார்கள்.
நான் பாதி மலையாளி ஆகிவிட்டேன். கமல் தமிழன் என கூறினால் சண்டைக்கு வரும் மலையாளிகள் இருக்கிறார்கள்.”என்றார்
தேவர்மகன் படத்துக்கு 7 நாட்களில் ஸ்கிரிப்ட் எழுதிய அனுபவம் குறித்து கூறுகையில்,’தேவர் மகன் ஸ்கிரிப்ட் 7 நாளில் எழுதிவிட்டேன்.இயக்குநர் நண்பர் ஒருவர் அதிக அழுத்தம் கொடுத்தார். எழுதித் தரவில்லை என்றால் படத்தில் இருந்து வெளியேறிவிடுவேன் என கூறினார். அதனால அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு 7 நாளில் எழுதி முடித்தேன். தற்போது அது சாத்தியமா என தெரியவில்லை” என்றார் .