நட்பதிகாரம் 79 என்கிற படத்தில் நடித்திருப்பவர் தேஜஸ்வி மடிவாடா .தெலுங்குப் படங்களில் இவர்தான் தீக்கொளுத்தி.! அதாவது அடல்ட் படங்களில் நடிப்பதற்கு அஞ்சாதவர்.
நாகார்ஜுனா நடித்த மனம், ஹார்ட் அட்டாக், சுப்ரமணியம் ஃபார் சேல், ஶ்ரீமந்துடு உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை தேஜஸ்வி மடிவாடா.தெலுங்கு பிக்பாஸ் பிரபலம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தற்போது இவர் தெலுங்கில் கமிட்மென்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
“பாலிவுட் ஹீரோயின்கள் பட வாய்ப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்”என்று இவர் சொன்னது வட இந்திய நடிகைகளின் வயிற்றில் அக்கினிக்குழம்பாக உருவாகி இருக்கிறது.
“ஏம்மா இப்படி சொன்னே ?”என்பதற்கு தேஜஸ்வி சொன்ன விளக்கஉரை அடடே ரகம்.!
“சினிமாவில் வாய்ப்பு தருவதாகச் சொல்லி பெண்களை ‘கவர’ நினைக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற பிரச்னைகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். என்ன பொழைப்புடா இது என்று சினிமாவில் இருந்து வெளியேறிவிடலாமா என்று கூடநினைத்தேன்.!
.பெரும்பாலான நடிகைகள், இந்த பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். சினிமா துறையில் 90 சதவிகிதம் இந்தப் பிரச்னை இருக்கிறது.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கத்தை சினிமாவில் இருந்து அடியோடு ஒழிக்க வேண்டும். மும்பை நடிகைகள், பட வாய்ப்புக்காக, மனரீதியாக இதற்கு தயாராகி விடுகிறார்கள்.அதனால்தான், உள்ளூர் நடிகைகளை விட அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.
தென்னிந்திய நடிகைகள் பிகினி உடை, முத்தக்காட்சி போன்றவற்றில் நடிப்பதற்கு கூட கூச்சப்படுவார்கள். பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் பற்றி தென்னிந்திய நடிகைகள் அறிந்திருந்தாலும் அதற்கு அவர்கள் தயாராக இல்லை
நான் ஒருவரை காதலித்து வந்தேன். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர் என்னை பிரிந்துவிட்டார். அதற்கு காரணம், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் வழக்கம் சினிமாவில் இருப்பதுதான். இதை நினைத்தே என் காதலை அவர் முறித்துவிட்டார்.
இவ்வாறு தேஜஸ்வி கூறியுள்ளார்.