காலம் உருண்டோடினாலும் சில நிகழ்வுகளை மனதில் ஆழமாக பச்சைக் குத்தி விட்டுப் போய் விடும். அவைகளை நினைக்கும்தோறும் அந்த நிகழ்வுகள் நேரில் வந்து நின்று விடும்.
ரஜினியின் நண்பர் மோகன்பாபுவுக்கு அத்தகைய ஆனந்த நிகழ்வினை பெத்த ராயுடு தந்து விட்டு சென்றிருக்கிறார்.
ரஜினி-மோகன்பாபு இருவரும் இணைந்து நடித்திருந்த அந்தப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது சில்வர் ஜூபிளி வருடம்.
இந்தப்படம் உருவான கதையை மோகன்பாபுவினால் மறக்க முடியாது என்கிறார்.
“ஒருநாள் ரஜினி என்னிடம் தமிழ்ப்படம் நாட்டாமை பார்த்தியா.சரத்குமார் நடிச்சது ஹிட் படம். அதை ரீமேக் பண்ணு .நான் கெஸ்ட் ரோல் பண்றேன்.உனக்கு அப்பாவா ஆக்ட் பண்றேன்னார் .உண்மையிலேயே அந்த பெத்தராயுடு படம் சூப்பர் ஹிட்.
என்னுடைய குட் பிரண்ட் ரவிராஜா பினிசெட்டிதான் ஸ்கிரிப்ட்.அவர்தான் டைரக்ட் பண்ணினார்.டயலாக் ரைட்டர் சத்ய மூர்த்தியை வச்சு சில மாற்றங்கள் பண்ணினோம்.
பைனான்சியல் பிரச்னை வந்தது. இது ரஜினியின் காதுக்குப்போய் என்னை கேட்டார் .
“என்ன பண்ணப்போறே?”
“தெரியல ரஜினி!”
டோன்ட் வொரி !நான் தாரேன்.படத்தை பினிஷ் பண்ணுன்னு சொல்லி 45 லட்சம் கொடுத்தார்.என்னால் எப்படி மறக்க முடியும்.
பூஜை அன்னிக்கி ஓப்பனிங் ஷாட் ! நானும் ரஜினியும்தான்!கதைப்படி அப்பாவான ரஜினிக்கு நான் மாலை போட்டு வணங்கினேன்.அதே மாலையை எனக்கு ரஜினி போட்டு பாதம் தொட்டு வணங்கினார். அந்த போட்டோவை நான் இன்னமும் பத்திரமா வச்சிருக்கேன். ரஜினியின் அந்த உயர்ந்த உள்ளம் மறக்க முடியுமா? பெருமையா இருக்கு .என்னுடைய நண்பன் சார்!” என நெகிழ்கிறார் மோகன்பாபு.