பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இன்று விசுவரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது மரணத்தில் மர்மம் இருப்பதாக உயர் அதிகாரிகளே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
பாலிவுட்டில் வேற்று மாநிலத்தவர் கால் பதித்து விடக்கூடாது என்பதில் குறிப்பிட்ட சிலர் ஆதிக்க மனப்பான்மையுடன் இருப்பதாக சந்தேகம் கிளம்பியிருக்கிறது.
பாலிவுட் நடிகை மீரா சோப்ரா கனல் கக்கியிருக்கிறார்.
வலை தளங்களில் தன்னை குறி வைத்துத் தாக்கியதாக ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைமில் புகார் கொடுத்திருப்பவர்தான் இந்த மீரா சோப்ரா .பெரிய இடம் என்று பார்த்து பயந்து ஒளிகிற ஆள் இல்லை.
சுஷாந்த் மரணம் தொடர்பாக பாலிவுட் பிரபலங்களை பெயர் சொல்லாமலேயே குற்றம் சாட்டி சொற்களால் சுட்டு எடுத்திருக்கிறார் .
“நான் எப்படிப்பட்ட தொழிலில் இருக்கிறோம் தெரியுமா?இரக்கமற்ற ,கோரமான துறை இது! நீண்ட காலமாக சுஷாந்த் எத்தகைய மன அழுத்தத்தில் இருந்தார் என்பது நமக்கு நல்லாவே தெரியும்.! அவருக்காக நாம் என்ன செய்தோம்?
அவருடன் நெருக்கமாக இருந்த சிலர் ,இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் எங்கே போனார்கள்? எந்த விதமாக அவருக்கு உதவினார்கள்?
எவரும் வந்து உதவவில்லை?அன்பு காட்டவில்லை.!
பொதுவாக ஒரு படம் தோல்வி அடைந்து விட்டாலே அந்த நடிகரை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள்.
இங்கே வெளிமாநிலத்தவர் வெளிமாநிலத்தவராகவே கருதப்படுகிறார்கள். சக மனிதராக பார்ப்பதில்லை ,மதிப்பதில்லை. ஒருவனுக்கு உதவி தேவைப்படுகிறபோது நாம் உதவி செய்ய வேண்டும். செய்தோமா?
வருத்தப்படுவதுபோல நடிக்காதீர்கள்.
உன்னை காப்பாற்றத் தவறி விட்டார்கள். அதற்காக வருந்துகிறேன் சுஷாந்த் “என பதிவு செய்திருக்கிறார்.