எஸ்.டி .ஆர் -இயக்குநர் விஜய்சந்தர் மீண்டும் இணைகிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சந்தர் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வாலு’.
ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தை தொடர்ந்து, விஜய் சந்தர், ‘ஸ்கெட்ச்’ மற்றும் ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார்.
கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே சிம்புவின் புதிய படம்தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில்,விரைவில் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை தொடங்க உள்ளதாக கூற ப்படுகிறது
தெலுங்கு படமான ‘டெம்பர்’ தமிழ் ரீமேக்கில் சிம்பு – விஜய் சந்தர் இருவரும் இணைய இருந்த நிலையில் திடீரென அந்தப் படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .