தேசிய பேட்மிண்டன் வீராங்கனையும், சர்வதேச அளவில் ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டவருமான வர்ஷா பெலவாடி,காதல் கல்யாணம் செய்யப்போகிறார்.
பிரபல கன்னட நடிகர் வினாயக் ஜோஷிதான் இவரது காதலர் .
நடிகர் வினாயக் ஜோஷி தங்களது காதல் அனுபவத்தை கூறினார்.
‘வர்ஷாவை தனக்கு சிறுவயதில் தெரியும் என்றாலும், அவருடன் கடந்த 25 வருடங்களாக தொடர்பில் இல்லை.
அதன்பின் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரால் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் நட்பானோம் .
இந்த நட்பு நாளடைவில் காதலாகி மாறி,தற்போது, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது” என்கிறார்.
கன்னடத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் வினாயக் ஜோஷி .