பாலிவுட் நடிகையான அதிதிராவ் தமிழில் சிருங்காரம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் சரிவர அமையவில்லை.!
இந்திக்கு சென்றார்.அங்கு அபிஷேக் பச்சன் நடித்த டெல்லி 6, மற்றும், “ஏ சாலி ஜிந்தகி” ரன்பீர் கபூருடன் “ராக் ஸ்டார்” ஆகிய படங்கள் அவருக்கு மிகப் பெரிய பெயரையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது,
மீண்டும் தமிழில் மணிரத்னம் இயக்கிய, ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் நடிகர் கார்த்தியுடன் தனது ரீ எண்ட்ரியை தமிழில் கொடுத்து கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.
இந்நிலையில்,கொரோனா லாக்டவுன் பல மாதங்களாக நீடித்து கொண்டே வருகிற நிலையில், இந்த ஆண்டு படப்பிடிப்புகளும் மேலும் எந்த ஒரு சினிமாத்துறை சார்ந்த வேலைகளும் சரிவர நடக்காத வருத்தத்தில் எல்லோரும் இருந்துவருகிறார்கள்.
அதிதிராவ் தனது இன்ஸ்டாகிராமில், “எனக்கு இந்த 2020 ஆம் ஆண்டு திரும்ப வேண்டும்” என பதிவிட்டு,தனது புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார்.
அதிதிராவ் (இந்த வருடம் மட்டும் தமிழ்,இந்தி, தெலுங்கு,மலையாளம் என 5மொழி படங்களில் நடித்து வருவது குறிப்பிடதக்கது) அதிதிராவின் இப்பதிவிற்கு பாடகர் சித் ஸ்ரீராம், நானும்அதை ஒப்புக் கொள்கிறேன் எனக்கும் இந்த ஆண்டு திரும்ப வேண்டும் “என கூறியுள்ளார்.
கொரோனா தலைவிரித்தாடும் இந்த வருடம் மீண்டும் வேண்டும் என கேட்கிறார்களே, இவர்களை என்ன செய்ய? என பலரும் விமர்சித்து வருகின்றனர்.