நெபோட்டிசம் –அரசியல்.,ஆட்சியில் இருப்பவர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிற ஆங்கில வார்த்தை.
தகுதியே இல்லாதவனை , தன்னுடைய ரத்த சொந்தம் என்பதால் பதவியில் உட்கார வைப்பது…
திறமைசாலியை புறம் தள்ளிவிட்டு நடிப்பே வராத ஒருவன் தனது ரத்த உறவு என்பதால் முன்னிலைப்படுத்துவது ….
இப்படியெல்லாம் ‘நெபோட்டிசத்துக்கு ‘அர்த்தம் சொல்லலாம் .
திரை உலகில் தன்னுடைய ரத்த சொந்தங்களை திணிப்பதும் அந்த வகையானதுதான்.!
இதற்குத்தான் சுஷாந்த் சிங் ராஜ்புட் பலியாகி இருக்கிறார் என்பது பெரும்பான்மையினரின் கருத்து. இந்த பாழாய்ப்போன நெபோட்டிசம் பற்றி சுஷாந்த்தே பேசியிருக்கிறார்.
இதைப்பற்றி பிரகாஷ்ராஜ் சொல்வதென்ன?
” நெபோட்டிசம்,! இதைக் கடந்துதான் நானும் வந்திருக்கிறேன். அதைக் கடந்து வாழ்ந்திருக்கிறேன். இன்னும் பிழைத்துக்கொண்டிருக்கிறேன். எனது காயங்கள் என் சதைகளை விட ஆழமானவை ..
ஆனால் இந்த குழந்தை சுஷாந்த் சிங்ராஜ்புட் அதைக் கடந்து வரமுடியவில்லை. நாம் கற்றுக்கொள்வோம் .. நாம் உண்மையிலேயே எழுந்து நிற்போம், அத்தகைய கனவுகளை இறக்க விடமாட்டோம்.” என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த நெபோட்டிசம் தமிழ்ச்சினிமாவிலும் இருக்கிறது.!