வாயாடி ,சண்டைக்காரி என்றெல்லாம் வனிதா (விஜயகுமார் )வுக்கு செல்லப்பெயர் உண்டு. இவரது வம்புச்சண்டையினால்தான் பிக்பாஸ் எகிறி அடித்தது என்பார்கள். பிரபல நடிகர் விஜயகுமார் -மஞ்சுளாவுக்கு பிறந்தவர்களில் வனிதாவும் ஒருவர்.
வனிதாவுக்கு பெற்றோர் பார்த்து கல்யாணம் பண்ணி வாய்த்த மாப்பிள்ளைதான் நடிகர் ஆகாஷ்.இந்த தம்பதிக்கு ஒரு ஆண் -பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். மகன் அப்பாவிடமும் மகள் அம்மாவிடமும் வளருகிறார்கள் .அப்பாவிடம் வளருகின்ற மகன் வெளிநாட்டில் படிக்கிறான். ஆகாசுடன் சண்டைபோட்டுக்கொண்டு டைவர்ஸ் வாங்கிக்கொண்டு வனிதா பிரிந்து போனார்.
இவரை விஜயகுமார் குடும்பத்தினர் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. வனிதா அடிக்கடி போலீஸ் நிலையம் போவார் புகார் கொடுப்பார். பத்திரிகைகளில் பிரபலமாவார்.
இரண்டாவதாக ராஜன் ஆனந்த் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தார் .இவர்களுக்கு மகள் இருக்கிறார்.காலப்போக்கில் கணவருடன் கருத்து வேறுபாடு .விவாகரத்து. பின்னர் பிக்பாஸ் கை கொடுத்தது. மக்கள் ஆதரவு இல்லாததால் இடையிலேயே வெளியேறிவிட்டார். விஜய் டி வி கை கொடுத்து சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .இங்குதான் வாழ்க்கை திசை மாறியது.
இவரது சமையல் நிகழ்ச்சிகளுக்கு யு டியூப் சேனலில் நல்ல வரவேற்பு .அங்குதான் பீட்டர்பால் என்பவரை சந்தித்திருக்கிறார்.இவர்தான் யு டியூப் சேனல் தொடங்க வனிதாவுக்கு உதவிகள் செய்திருக்கிறார்.இவரைத்தான் வருகிற 27 -ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போவதாக திருமணப்பத்திரிகை கூறுகிறது.இது வனிதாவுக்கு மூன்றாவது திருமணம்.