
ன். அவர் எனக்கு சில அட்வைஸ் பண்ணினார்.தனக்கு தினமும் சல்மான்கான் போன் செய்து பேசுவதாக சொன்னவர் அப்படியே சில தகவலையும் சொன்னார்.
இந்த கேசுக்காக சல்மான் நிறைய செலவு செய்கிறார். அந்த பையனை (சூரஜ்) தொந்தரவு செய்ய வேண்டாம் .போகிற போக்கினைப் பார்த்தால் சல்மான் கானை பாலிவுட் பிஸ்தா என்று சொன்னாலும் சொல்லி விடுவார்களோ என்னவோ…தற்போது அவர் நாட்டாமை ரேஞ்சுக்கு சித்தரிக்கப்படுகிறார்.
சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பின்னரே மூடிக்கிடந்த பல வாய்கள் திறந்திருக்கின்றன. மனதைத் திறந்து வைத்துப் பேசியிருக்கின்றன.
பாலிவுட்டில் நிலவியிருக்கிற தனி மனித ஆதிக்கத்தை தோலுரித்துக் காட்டியிருக்கின்றன .
சல்மான்கான்தான் அந்த ஆதிக்க மனிதர் என்பதாக சொல்கிறார்கள்.
நடிகை ஜியாகான் —நடிகர் சூரஜ் காதலைப் பற்றி பாலிவுட் நன்கறியும்.
அந்த காதலில் எப்படியோ விரிசல் ஏற்பட்டுவிட்டது.அதன் விளைவாக ஜியா தற்கொலை செய்து கொண்டார் .சூரஜ் மீது விசாரணை நடந்தது.
இந்த விசாரணையில்தான் சல்மான்கான் தலையிட்டிருக்கிறார் என்பதாக தற்போது ஜியாவின் அம்மா ரபியா கான் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“2015-ல் நடந்த சம்பவம் இது. சி.பி.ஐ ஆபிசர் ஒருவர் போன் பண்ணி தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டார். நான் வெளிநாட்டில் இருந்து அதற்காக வந்தேன். அவரைப் பார்த்துப் பேசினேன். அவர் எனக்கு சில அட்வைஸ் பண்ணினார்.தனக்கு தினமும் சல்மான்கான் போன் செய்து பேசுவதாக சொன்னவர் அப்படியே சில தகவலையும் சொன்னார்.
இந்த கேசுக்காக சல்மான் நிறைய செலவு செய்கிறார். அந்த பையனை (சூரஜ்) தொந்தரவு செய்ய வேண்டாம் ..அவனை தொட வேண்டாம் விட்டு விடுங்கள் அவங்க பெரிய இடம் .நாங்க என்ன செய்ய முடியும் மேடம்?”என்று அந்த அதிகாரி தன்னிடம் சொன்னதாக ரபியாகான் சொல்லியிருக்கிறார்.
சுய ஆதிக்கம் படைத்தது சிபிஐ என்று சொல்வதெல்லாம் சும்மா வெறும் பேச்சுத்தானா?




