ஐயப்பனும் கோஷியும் படம் இயக்கியவர் சச்சி .
6 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் பிருத்விராஜும் பிஜூமேனனும் நடித்திருந்தனர். பிளாக் பஸ்டர் !சூப்பர் ஹிட். 60 கோடி வசூலித்தது என்றால் சும்மாவா! இந்த படத்தை தமிழில் ரீ மேக் செய்யவிருக்கிறார்கள் .
இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருச்சூர் மருத்துவமனையில் சேர்த்தனர் .செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது .இவருக்கான தொடர் சிகிச்சைக்காக சில நடிகர்கள் பண உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் திடீரென உடல்நலம் பின்னடைந்தது .சிகிச்சை பலன் அளிக்கவில்லை. இன்று இயற்கை அடைந்துவிட்டார். மொத்த மலையாள திரை உலகமும் அதிர்ச்சியில் இருக்கிறது.