தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் சிலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக்க கூறப்படுகிறது .
இந்நிலையில், நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ்சிவன் மிஷ்கின் உள்ளிட்ட திரையுல பிரமுகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் இயக்குநர் பாரதிராஜா, நடிகை ஸ்ருதிஹாசன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பாதுகாப்பு கருதி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.