நாளைக்கு நடிகர் விஜய்யின் பிறந்த நாள்.
பொதுவாக தங்களின் பிரியமான நடிகர்களின் பிறந்த நாளினை ரசிகர்கள் அட்டகாசமாக கொண்டாடுவார்கள் அவர்களின் அலப்பரையான சுவரொட்டிகள் எல்லோராலும் பேசப்படும். வார்த்தைகளில் தங்களின் ஆசைகளை வெளிப்படுத்தி விடுவார்கள். அது வேறு சில நடிகர்களின் ரசிகர்களை உசுப்பி விட்டுவிடும்.தொடர்ந்து டிவிட்டர்களில் சண்டை போட்டுக் கொள்வார்கள் .இது பழக்கமாகிப் போன வழக்கம்தான்.
தற்போது கும்பகோணம் விஜய்யின் ரசிகர்கள் வித்தியாசமான சுவரொட்டியை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஒப்பிட்டு வாசகங்கள் அமைந்துள்ளன.
“வருங்கால தமிழகத்தின் ஜெகன்மோகனாரே!”என்று குறிப்பிட்டு ஜெகன் மோகன் ,விஜய் ஆகியோரின் படங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.