சில பெண்கள் பார்ப்பதற்கு அவ்வளவு அடக்க ,ஒடுக்கமாக இருப்பார்கள்.பாய்ந்தால் இப்படித்தான் காட்டேரி இருக்குமோ என்பதற்கு உதாரணமாகிவிடுவார்கள். பாய்ச்சல் குத்தி கிழிக்கும் அளவுக்கு இருந்து விடும்.!
அத்தகைய பெண்களின் பார்வையில் ராஜ நாகத்தின் சீற்றத்தை உணர முடியும்.!
அத்தகைய சீற்றத்தை பிரபஞ்ச முன்னாள் அழகி சுஷ்மிதா சென் காட்டியிருக்கிறார்.
அவர் நடித்து வெளிவந்திருக்கிற படம்தான் ஆர்யா. நல்ல விமர்சனங்கள். பாராட்டுகள்.
அந்த படத்தில் சுஷ்மிதா நடித்திருந்த கேரக்டர் பற்றி கேட்ட போது ஒரு ஆங்கில இணைய தளத்துக்கு அவர் கூறிய பதிலில் இருந்து ……!
“நான் இயல்பாவே தீவிரமான பெண். அந்த தீவிரம் நீர்த்துப்போக விரும்ப மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவும் அமைதியான ஆள்.சந்தோஷமாக இருக்கவே விரும்புகிறேன்.எனது வாழ்க்கையில் டிராமாவுக்கு இடம் கிடையாது.அதற்கு அப்பாற்பட்ட மனுஷி. நெகட்டிவிட்டிக்கு அவசியமில்லை.
ஆனால் ….?
எவராவது என்னுடைய குடும்பத்தை அவதூறு செய்ய நினைத்தால் ,அது யாராக இருந்தாலும் பார்க்கமாட்டேன்.அமைதி காணாமல் போய் விடும் ,புலிப்பாய்ச்சலாகத்தான் இருக்கும். என் குடுமபத்தைக் காப்பதற்கு வேறு வழி கிடையாது!”என்கிறார்.