பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவின் மகள் சோனாக்ஷி சின்கா.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையை அடுத்து, இந்தி சினிமாவில் கடுமையான வாதப்பிரதாபங்கள் ,சர்ச்சை எழுந்துள்ளது.
சினிமாவில் நிலவும் பவர் அரசியல், வாரிசு நடிகர், நடிகைகளால் மற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோவது ஆகியவைகளை வைத்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்துவருகின்றன.
சிலர், நேரடியாக வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்களுக்கே சென்று சரமாரியாக விளாசிவருகிறார்கள்.
சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹாவிடமும் சில நெட்டிசன்கள் கேள்வி கேட்டனர்.
சுஷாந்த் சிங் மரணமடைந்தபோது, நடிகை கங்கனா, பாலிவுட்டை கடுமையாகச் சாடியிருந்தார். .அப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை சோனாக்ஷி, ‘ஒருவர் மரணமடைந்திருக்கும் நேரத்தில் சிலர் அவர்கள் பிரச்னைகளைச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அப்படி செய்வதை நிறுத்துங்கள். உங்களது எதிர்மறைக் கருத்தும், வெறுப்பும் இப்போது தேவையற்றது’ என்று கங்கனாவை மறைமுகமாக சாட்டியிருந்தார் .
சும்மா விடுவார்களா சோனாக்ஷியை நெட்டிசன்கள் வாரிவிட்டார்கள் .காரசாரமான வாக்குவாதங்கள் கிளம்பின.
இந்நிலையில் சோனாக்ஷி, தனது ட்விட்டர் கணக்கை முடக்கி உள்ளார்.
‘உங்கள் மன ஆரோக்கியத்தை காப்பதற்கான முதல்படி எதிர்மறையான விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான் நல்லது..
இப்போதெல்லாம் எதிர்மறை விஷயங்கள் ட்விட்டரில்தான் அதிகமாக இருக்கிறது. நான் எனது கணக்கைச் செயலிழக்கச் செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
பின்னர் இந்த ஸ்கிரீன்ஷாட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “தீ எரியட்டும், எனக்கு கவலை இல்லை’ என தனது ஆவேசத்தை பதிவு செய்துள்ளார். மேலும், ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கும் பகுதியையும் முடக்கி உள்ளார்.பாலிவுட்டில் இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது