வனிதா விஜயகுமாருக்கு வருகிற ஜூன் 27 ஆம் தேதி மூன்றாவது கல்யாணம் நடக்கப்போகிறது.
ஏற்கனவே நடந்த இரண்டு திருமணங்களும் விவாக ரத்தில் முடிந்ததையடுத்து நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை கல்யாணம் செய்து கொள்ளப்போகிறார்..
நடிகை வனிதாவிஜய்குமார் தனது சமூக வலைத்தளத்தில் மூன்றாவது திருமணம் ஏன் என்றும், திருமணத்துக்கு தேதியை 27ஆம் தேதி என தேர்வு செய்தது ஏன் என்பது குறித்தும் கூறிஇருக்கிறார்.
:”நான் ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளேன். அந்த சேனலில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவு கொண்டிருந்தபோது திடீரென லாக்டவுன் ஏற்பட்டு விட்டதால் டெக்னீசியன்கள் யாரும் இல்லாமல் தவித்தேன்.
அந்த சமயத்தில்தான் விஷுவல் எபெக்ட் இயக்குநர் பீட்டர் பால் எனக்கு உதவி செய்ய அடிக்கடி வீட்டிற்கு வந்தார்.எனது குழந்தைகளிடமும் அன்புடன் பழக ஆரம்பித்ததால் அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் இருந்தார்.
இந்த நேரத்தில் திடீரென அவர் ஒருநாள் எனக்கு புரபோஸ் செய்த போது எனது மகள்கள் சம்மதிக்குமாறு என்னை வற்புறுத்தினார்கள்.
நாங்களெல்லாம் திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் நீங்கள் தனியாக இருப்பதை எங்களால் தாங்க முடியாது என்று எனது மகள்கள் வற்புறுத்தியதாலும், பீட்டர் பால் காட்டிய அன்பும் நான் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க காரணமாயிற்று.
இந்த திருமண தேதியை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்தபோது திடீரென ஜூன் 27ஆம் தேதி கண்ணில்பட்டது. ஏன்னா, அதுதான் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமண நாள். என் அம்மா அப்பா திருமண நாளில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுடைய ஆசி எனக்கு கிடைக்கும் என்பதற்காக அந்த நாளைத் தேர்வு செய்தேன்.என அவர் பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.