காதலர் பெயரை பச்சை குத்திக் கொண்டால் மட்டும் போதுமா?
அது உணர்ச்சியின் உந்துதலால் விளைந்த வினை.!
இப்படித்தான் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்திக் கொண்டிருந்தார் நயன்தாரா.
அந்த காதல் பொசுக்குன்னு பொத்துக்கிட்டு போயிருச்சே.! அந்த பச்சையை மாற்றுவதற்கு அவர் என்னவெல்லாம் பாடு பட வேண்டியதாச்சு .!
நிதானம் வேணும். வீதியை சுத்திவருகிற தேர் நிலைக்கு வந்து விடுமா,,வழியில் பள்ளம் கிள்ளத்தில் தேரின் சக்கரம் மாட்டிக்க கூடாதே!
தன்னுடைய பெயரையும் பீட்டரை பாலின் பெயரையும் பச்சை குத்தியிருப்பதாக படம் போட்டு பதிவு செய்திருக்கிறார் வனிதா.
இதுவரை இரண்டு மாப்பிள்ளைகளை மாத்திக் கொண்டிருக்கிறார்.இது ஒன்னும் உலகத்தில் நடக்காத ஆச்சரியம் இல்ல. இதையே ஆம்பள செய்தால் இந்த உலகம் கண்டுக்காது. ஆனா ஒரு பெண் செய்தால் உலகமே தலையில் விழுந்த மாதிரி கத்தும் .
பண்பாடு ,கலாசாரம் போச்சேன்னு இரைச்சல்கள் !இப்படிப்பட்ட உலகத்தில் வனிதா துணிச்சலுடன் ஒரு துணையை தேடிக்கொண்டது பாராட்டுக்குரியது. அதற்காக பச்சை குத்திக்கொள்வதெல்லாம் டிராமா!