கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் , தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள படம், ஜகமே தந்திரம்.
கடந்த மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக விஜயின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெயம்ரவியின் பூமி ஆகிய படங்களின் வரிசையில் ஜகமே தந்திரம் படமும் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் சிங்கிள் ஹீரோவா நடிக்கிறாரா? அல்லது அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா? என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் குழம்பி தவிக்கிறார்கள். இப் படத்தில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ, சமீபத்தில்அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஜகமே தந்திரம் படத்தின் மையக்கருவை வெளியிட்டுள்ளார்.
அதாவது, லண்டனில் இந்தியர்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க, பிரபல கேங்ஸ்டரான ஜேம்ஸ் காஸ்மோ, இந்தியாவில் லோக்கல் தாதாவான தனுஷை வேலை அமர்த்துவதாகவும், ஆனால், அவருக்கே இவர் வில்லனாக எப்படி மாறுகிறார் என்பது தான் கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.இது கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், கதையின் சஸ்பென்ஸ் உடைந்த மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர்