நயன்தாராவுக்கு கொரோனா. அதனால் தனிமைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது .
தற்போது நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் செயலி மூலம் மாற்றப்பட்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் குழந்தைகளாக இருப்பது போன்ற க்யூட்டான காட்சிகள்இடம் பெற்று உள்ளது.
மேலும் அதில்இடம் பெற்றுள்ள பதிவில், ‘எங்களைப் பற்றிய வதந்திகள் குறித்த செய்திகளை நாங்கள் பார்த்து வருகிறோம். நாங்கள் எந்தவித பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம். கேலி செய்யும் அனைவரின் கற்பனைகள் எங்களுக்கு வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது. இதனை காண கடவுள் எங்களுக்கு பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து உள்ளார்’ என இருவரும் பதிவிட்டுள்ளனர்