ரெஜினா கசன்ட்ரா …
தமிழ் ,தெலுங்குப்படங்களில் ரவுண்டு கட்டி வந்தவர்.
சென்னையில் பலதடவை இவரை பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் .
தொட்டுப்பார்ப்பதிலும் உரசுவதிலும் அந்த மிருகங்களுக்கு அப்படி என்ன இன்பமோ?பொதுவாக திருவிழா கூட்டங்களில் இதற்காகவே பலர் வருவார்கள்
“என்ன மாமு..கையெழுத்து போட்டியா?”சங்கேத வார்த்தையாம் .ஒருவன் கேட்பான். இன்னொருவன் “இன்னும் சரியான எடம் கிடைக்கலே மாப்ள.”என்பான் .மாட்டிக்கொண்ட பெண்களால் என்ன செய்ய முடியும்? தப்பு பண்ணி விட்டு அந்த கூட்டத்தில் வினாடி நேரத்தில் மறைந்து விடுவார்கள்.
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ரெஜினாவே சொல்கிறார் கேளுங்கள்..
“நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது சென்னை ஈகா தியேட்டர் பாலம் அருகில் நாலைந்து மாணவர்கள் என்னைப்பார்த்து ஆபாசமாக கமெண்ட் அடித்தார்கள்,அதில் ஒருவன் என் உதடுகளை தொடப்பார்த்தான்.எனக்கு அதிர்ச்சி.
அவனை ஓங்கித்தள்ளிவிட்டேன்.நான் பயந்தவள் ,பலவீனமானவளும் கூட! ஆனால் அந்த சம்பவத்துக்குப்பிறகு தைரியசாலி ஆகிவிட்டேன்.”என்கிறார் ரெஜினா .