கடந்த ஆண்டு ஹலிதா ஷமீம்.இயக்கத்தில் வெளியானபடம் சில்லுக் கருப்பட்டி .
அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமில்லாமல் அனைத்து மொழி பேசும் மக்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது
. ஐந்து வெவ்வேறு கதைகளை எடுத்துக் கொண்டு பிரமாதமாக திரைக்கதை அமைத்து தனது நேர்த்தியை மிக பிரமாதமாக வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது, ஹலிதா ஷமீம். இயக்கிவரும் புதிய படம் மின்மினி.
இப் படத்தின் சிறப்பம்சமே முழுக்க முழுக்க சிறுவர்களை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் முதற் பாதி 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட நிலையில்,இரண்டாம் பாதி அதே சிறுவர்களை வைத்து 5 வருடங்களுக்கு பின் என 5 ஆண்டு இடைவெளியில் அதே சிறுவர்களை காட்ட இருக்கும் இந்த படம் தற்போது மிக வித்தியாசமான படைப்பாக உருவாகி வருகிறது.
இந்நிலையில்,தனது பிரமாண்ட படைப்புகளுள் ஒன்றாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை உருவாக்கி வரும் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில், கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், இயக்குனர் ஹலிதா ஷமிமை ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளார்.”
“சில்லுக்கருபட்டி இயக்குனர் ஹலிதா ஷமீமின் ஒர்க் அந்த படத்தில் சூப்பரா இருந்தது..இப்போ சின்ன பசங்கள ஒரு குறிப்பிட்ட வயசுல ஷூட் பண்ணிட்டு கதைக்கு அவங்க வளர்ந்து இருக்கணும்னு என்பதற்காக உண்மையாகவே அவங்க வளர்ற வரைக்கும் அஞ்சு வருஷம் வெயிட் பண்றாங்கன்னு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தாங்க, அது ரொம்பவே சுவாரஸ்யமாகவும் புதுசாகவும் இருந்தது. படத்தோட பெயர் கூட மின்மினி’னு நினைக்கிறேன். அந்தப் படத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என புகழ்ந்துள்ளார்..