மலேஷியா விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
இருமுகன் படக்குழுவினர் விளக்கம்
இருமுகன் படக்குழுவினர் விளக்கம்
விக்ரம் – நயன்தாரா நடிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கி வரும் “இருமுகன்” படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக மலேஷியா சென்ற நடிகை நயன்தாரா, நாடு திரும்பும் போது விமானநிலையத்தில் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து இருமுகன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை:
மலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் பயணிப்பர். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது. அம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் பயணித்துள்ளனர்.