ஆழ்துளை கிணற்றின் ஆபத்தை சுட்டிக்காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்திய படம் அறம் .
இந்த படத்தை இயக்கியவர் கோபி நயினார் .முதன்மை வேடத்தில் நடித்திருந்தவர் நயன்தாரா. சிறந்த படமாக மக்களால் கொண்டாடப்பட்டது .நயனும் தன்னுடைய திரை ஆளுமையைக் காட்டியிருந்தார்.வழக்கமான டூயட் பாடுகிற நாயகியாக இல்லாமல் பொறுப்புள்ள கலெக்டரை பிரதிபலித்திருந்தார்.
இயக்குநர் கோபிநயினாரின் ஆற்றலையும் ,சிந்தனையையும் திரை உலகம் அறிந்து கொண்டது.
தற்போது கறுப்பர் நகரம் என்கிற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் ஜெய் .ஐஸ்வர்யா ராஜேஷ் ,மகிமாநம்பியார் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்தப்படம் இன்னும் முழுமை அடையவில்லை.
ஆனால் அறம் 2 படம் பற்றிய விவாதம் ஆரம்பமாகி இருக்கிறது.
நயனா,அல்லது வேறு யாரும் நடிக்கிறார்களா என்கிற விவரம் அறிவிக்கப்படுவதற்குள் “கீர்த்தி சுரேஷினால் நயன்தாரா அளவுக்கு நடிக்க முடியாது”என விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கோபி நயினார் இதுபற்றி இன்னும் பேசவே இல்லை !