சாத்தான்குளம் இரண்டு வியாபாரிகளின் படுகொலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. நாளை தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடை அடைப்பு நடத்தப்போகிறார்கள். காவல் நிலையத்தில் மிகவும் கொடூரமாக வியாபாரிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் .ஒருவரின் ஆசனப்பகுதி கடுமையாக சேதம் அடைந்திருப்பதாக சொல்லுகிறார்கள்.
ஆசனவாயில் லத்தியை செருகியதால் அந்த பாதிப்பு என்கிறார்கள். விசாரணைக்கமிஷன் என்ன சொல்லப்போகிறதோ?
அந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை இயக்குநர் -தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தப் பட்டிருக்கும் சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே! நீங்கள் தான் மக்களின் அரசா??