“தென்னிந்திய நடிகைகளா ..அவங்க அம்புட்டு நல்லவங்க இல்லியே! நீ அங்கிட்டெல்லாம் போயிடாதே”என்று பாலிவுட் கண்ணியவான்கள் சொல்கிறார்களாம்.
சொல்லி சொல்லி மாஞ்சு போகுது பாலிவுட் பட்சி பாயல்கோஷ்.!
தென்னிந்திய நடிகைகள் என்றால் நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ் ,சமந்தா,திரிஷா போன்ற சிலர்தான் இருக்கிறார்கள் .இவர்கள் யார் வயிற்றில் மண்ணடித்தார்கள் என்று பாலிவுட் பங்காளிகள் சொல்கிறார்கள்? அந்த நல்லவர்கள் யார் என்பதை பாயல் கோஷ் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.!
தமிழில், தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருந்தவர் பாயல் கோஷ்.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஓசரவல்லி உட்பட சில படங்களிலும்,இந்தியில்,ரிஷிகபூ
“கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தேன்., மரண பயம். எதை கண்டாலும் பீதி. என தவித்தேன் . குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆறுதலாக இருந்தனர் என்று கூறியிருந்தார்.
இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகைகள் பற்றி பாலிவுட்டில் தவறான எண்ணம் உள்ளது என்ற பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறார்
.இதுகுறித்து பாயல் கூறியிருப்பதாவது:
“தேசிய விருது பெற்றுள்ள சில தென்னிந்திய இயக்குநர்கள் சிலரது படங்களில் நடித்துள்ளேன். அவர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். அவர்களுடனும் தென்னிந்திய ஹீரோக்களுடனும் பணிபுரியும்போது எனக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்கள் நடிகைகளை, கதாநாயகிகளை தெய்வமாகப் பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் சில நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயிலே கட்டியுள்ளனர்.
நான் இந்தி சினிமாவில் வாய்ப்புத் தேடியபோது, தென்னிந்திய படங்களில் நடித்ததை பற்றி யாரிடமும் சொல்லாதே என்று சிலர் சொன்னார்கள்.
அவர்களுக்கு தென்னிந்திய நடிகைகள் பற்றி, தவறான எண்ணம் இருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை.தென்னிந்திய படங்களில் நடித்து ஏன் வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறாய், பாலிவுட்டில் கவனம் செலுத்து என்று இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.
பாலிவுட்டில் கவனம் செலுத்துவதை விட தமிழ், தெலுங்கில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று இப்போது நினைக்கிறேன். பாலிவுட் சினிமா, இப்போது தென்னிந்திய படங்களைத்தான் நம்பி இருக்கின்றன. அங்கிருந்துதான் பல படங்கள் ரீமேக் செய்யப்படுகின்றன” இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார் .