சுஷாந்த்சிங்கின் தற்கொலை பாலிவுட்டில் பேரலைகளை உருவாக்கி ஓய்ந்திருக்கிறது .
அவர் நடிப்பில் கடைசி படமாக உருவாகி இருந்த ‘தில் பெச்சாரா’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் 24ம் தேதி ரிலீசாகப் போவதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகி வைரலாகின்றன.
முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சைஃப் அலி கான், சஞ்சனா சங்கி ஆகியோரது நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது.இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் வரும் ஜூலை 24ம் தேதி தில் பெச்சாரா திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் ஆகப் போவதாக டுவிட் செய்துள்ளார்.
ஆனால், இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மேலும், சோகத்திலேயே மூழ்கி போயுள்ளனர்.
முன்னதாக இத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் அது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என படமாக அமையும் என்றும், மேலும் அது சுஷாந்துக்கு செய்யம் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும் என்றும் ஏ.ஆர். ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.