
நடிகர் விஷ்ணு விஷால், தனது தந்தையும், ஓய்வுபெற்ற போலீஸ் உயரதிகாரியுமான ரமேஷ் குடவாலாவுக்கு முடி வெட்டி விட்ட ‘ஜாலி’ வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் .
இப்பதிவைப்பார்த்த நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் ”மச்சி, எனக்கும் இப்போது முடி கட் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன்” என ஜாலியாக கலாய்த்தார்.
விஷ்ணு விஷால் சற்றும் சளைக்காமல் , ”நீ எப்போது ரெடியாக இருந்தாலும் ஓகே, முதலில் உன் மனைவி கீகியிடம் பர்மிஷன் கேட்டுக்கொள்” என ரிப்ளை கொடுத்தார்.
இதையடுத்து விஷ்ணு விஷாலின் பதிவுக்கு ஷாந்தனு, ”இதுக்கு எதுக்கு பர்மிஷன், நான் கட் தானே கேட்டேன், கட்டிங் இல்லையே” என மீண்டும் கலாய்க்க, இருவரின் ‘ஜாலி’டுவிட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.




