கொரோனாவால் திரையுலகம் முற்றிலுமாக முடங்கிகிடக்கிறது., வேறு வழியில்லாமல் தவிக்கும் சில தயாரிப்பளர்கள் தங்களது படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் ராம்கோபால் வர்மாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த எடிடி ( எனி டைம் தியேட்டர்) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராம்கோபால் வர்மா கூறியதாவது:
“முதலில் இந்த ஏடிடி தளத்தின் மூலம் , வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட , 2லட்சத்து ,75ஆயிரம் லாகின்களும், 1லட்சத்து 68 ஆயிரத்து 596 ரூபாய் கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன.
ஒட்டு மொத்தமாக எங்களுக்கு 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது.க்ளைமாக்ஸ் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, நான் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான நேக்டு நங்கா நக்னம் படத்தை இதே தளத்தில வரும் ஜூன் 27 அன்று வெளியிட இருக்கிறேன்.’நேக்டு நங்கா நக்னம்’, ஏடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் எனது இரண்டாவது திரைப்படமாகும்.இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக்கிடைக்கும். இந்த தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் முதல் படமும் இதுவே “என்கிறார்.