சும்மாவே நம்ம ரசிகர்கள் மல்லுக்கு நிற்பார்கள் .இந்த செய்தியை கேட்ட பிறகு என்ன செய்ய காத்திருக்கிறார்களோ?
மல்கோவா பெஸ்ட்டா ?ருமானி பெஸ்ட்டா ?
இரண்டுமே சுவையான மாம்பழ ரகம்தான். எது சிறப்பு என்பது கனியின் கனிவைப் பொருத்தது .இரண்டுமே விலை உயர்வானதுதான்.!
தற்போதைய பிரச்னை அதிக சம்பளம் வாங்குவது மாளவிகா மோகனனா ,அல்லது நயன்தாராவா?
மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் ஒரு படத்துக்கு 5 கோடி வாங்குகிறார்.அறம் நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு 4 கோடிதான் வாங்குகிறார் என்பதாக ஒரு ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டு ரசிகர்களை விசிறி விட்டிருக்கிறது!
மாளவிகா மோகனன் பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார் .இதனால் அவரது சம்பளம் அதிகமா ம். மாஸ்டர் படமும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது. விஜய் நடித்திருப்பதுடன் கூடுதல் எதிர்பார்ப்பு விஜய்சேதுபதியும் இணைந்திருப்பது.
கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜை அடுத்த உயரத்துக்கு கொண்டு செல்கிற படம் மாஸ்டராக இருக்கும் என்று எல்லோருமே நம்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் இத்தகைய எதிர்பார்ப்புகளை விட அதிக சம்பளம் வாங்குவது மாளவிகா மோகனனா நயன்தாராவா என்பதைத்தான் அந்த இணையதளம் விவாதத்திற்குரியதாக மாற்றி இருக்கிறது. நடத்தட்டும்.!!!