நடிகை நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை நேற்று மாலை கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.வீட்டில் மிகவும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் பீட்டர் பாலின் உறவினர்கள் கலந்து கொண்டனர் .
இந்நிலையில் பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் பீட்டர் பால் தன்னை ஏமாற்றி விட்டதாக வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், ” நடிகை வனிதா நேற்று பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே என்னுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. குடும்ப பிரச்னை காரணமாக 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். முறையாக விவாகரத்து அளிக்காமல் பீட்டர் பால் வனிதாவை மணந்துகொண்டுள்ளார்.
அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார். இந்த புகார் மனு தொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று திருமணம் நடந்து முடிந்த நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.