இந்த மீரா மிதூனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.
தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் பண்ணிட்டு தன்னை சி.எம்.ஆக்கணும்னு பிரதமர் மோடிக்கு திடீர்னு டிவீட் போட்டார். தனக்கு எல்லாத் தகுதியும் இருக்கு ,ஆட்சி நடத்தக்கூடிய திறமை இருக்குன்னு சொன்னார்.
இப்ப என்னடான்னா குபீர் பாய்ச்சலில் கங்கனா ரணாவத்தை பிறாண்டி எடுத்திருக்கிறார். தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிற கங்கனா ரனாவத்தை ராவி விட்டார் ராவி.!
“உனக்கு எனது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கு” என்று கேட்டிருக்கிறார்.
“கோலிவுட்டில் இருக்கிற அரசியல் உன்னை ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக இங்கு கொண்டு வந்து இருக்கிறது.
தைரியமான ,கல்வி அறிவுள்ள ,லெஜண்டரி மேடம் ஜெ.யின் வேடத்தில் நடிக்க , உனக்கு பொருந்தாத அந்த அம்மாவின் வேடத்தை நீ ஒப்புக்கொண்டதே வெட்கக்கேடானது. மறைந்த எனது அன்புக்குரிய சி.எம்.அம்மாவின் வேடத்தில் நீயா? வெட்கப்படுகிறேன் ” என்பதாக தன்னுடைய தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.